செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விளையாட்டு வீராங்கனை

Published On 2019-04-02 09:16 IST   |   Update On 2019-04-02 09:16:00 IST
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார். #Krishnapoonia #LokSabhaElections2019
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.  

அந்த வகையில் நேற்று காலை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 6 பேர் ராஜஸ்தான், 2 பேர் மகாராஷ்டிரா, ஒருவர் குஜராத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவர். இதுவரை 325 தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜஸ்தானில் உள்ள சடுல்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கிருஷ்ண பூனியா பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் வட்டு எறிதல் விளையாட்டு வீராங்கனை ஆவார்.  3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டிகளில் வட்டு எறிதலில் கலந்துக் கொண்டு, தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Krishnapoonia #LokSabhaElections2019

Similar News