செய்திகள்

ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படாது: பந்துவீச்சு பயிற்சியாளர்

Published On 2019-03-12 13:16 GMT   |   Update On 2019-03-12 13:16 GMT
ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படாது என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இந்தியா உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்துவிடும், உலகக்கோப்பைக்கான ஆடும் லெவன் அணியுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படாது என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பரத் அருண் கூறுகையில், “ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக் கோப்பையில் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் வீரர்கள் மாறுபட்ட சூழ்நிலையில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய முடியும்.

ஏறக்குறைய அணியின் காம்பினேசன் முடிவு ஆகிவிட்டது. ஆனால் உலகக் கோப்பைக்கு முன் அனைத்து வாய்ப்புகளையும் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோம். உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடருக்கு முன் நாங்கள் என்ன விரும்புகிறமோ, அதில் மிகவும் உறுதியாக இருக்க விரும்புகிறோம்.

தற்போது தொடர்ந்து இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்ததை பார்ப்பது மகிழ்ச்சியே. இது உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் முன்னேற்றம் அடைய ஏராளமான காரணிகளை கொடுத்துள்ளது.

பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்துவது அவசியம். என்ன நடந்தாலும் நேர்மறையான கருத்தில் நிலையாக இருப்பது அவசியம். ஆஸ்திரேலியா தொடர் மிகச்சிறந்த அனுபவம்” என்றார்.
Tags:    

Similar News