செய்திகள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் விருதுகளை வென்றனர் நாதன் லயன், மார்கஸ் ஸ்டாய்னிஸ்

Published On 2019-02-11 16:59 IST   |   Update On 2019-02-11 16:59:00 IST
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வருடந்தோறும் வழங்கும் விருதுகளை நாதன் லயன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் வென்றுள்ளனர். #CricketAustralia
ஒவ்வொரு வருடமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் விருதுகள் வழங்கி வருகிறது. இதேபோல் கடந்த வருடம் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சுழற்பந்து வீச்சாளரான நான் லயன் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதையும் வென்றனர்.

பெண்களுக்கான சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதை அலிசா ஹீல் வென்றார்.
Tags:    

Similar News