செய்திகள்

ரகானே, விஹாரி அபார ஆட்டம்: இங்கிலாந்து லயன்ஸை 138 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

Published On 2019-01-25 12:34 GMT   |   Update On 2019-01-25 12:34 GMT
ரகானே (91), விகாரி (92), ஷ்ரேயாஸ் அய்யர் (65) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸை 138 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து லயன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் ரகானே, அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அன்மோல்ப்ரீத் சிங் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரகானே உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரகானே 91 ரன்களும், விஹாரி 92 ரன்களும் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 181 ரன்கள் குவித்தது.

அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 47 பந்தில் 65 ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர் டேவியஸ் 48 ரன்கள் சேர்த்தார். 7-வது வீரர் கிரேகோரி 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து லயன்ஸ் 37.4 ஓவரில் 165 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியா ‘ஏ’ 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் மார்கண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News