செய்திகள்

ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மீதான தடை நீக்கம்: பிசிசிஐ

Published On 2019-01-24 18:11 IST   |   Update On 2019-01-24 18:11:00 IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக பிசிசிஐ அவர்களை சஸ்பெண்ட் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் பிசிசிஐ அவர்கள் மீதான தடையை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
Tags:    

Similar News