செய்திகள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய லெவன் அணியில் இரண்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு

Published On 2019-01-23 15:35 IST   |   Update On 2019-01-23 15:35:00 IST
இலங்கைக்கு எதிரான பிரிஸ்பேன் முதல் டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் புதுமுக வீரர்களான ரிச்சர்ட்சன், கர்ட்டிஸ் பேட்டர்சன் இடம்பிடித்துள்ளனர் #AUSvSL
ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான பகல்-இரவு ஆட்டமாக நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து காயம் காரணமாக ஹசில்வுட் விலகியுள்ளார். மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் துணைக்கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய கர்ட்டிஸ் பேட்டர்சன், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் விராட் கோலியை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிச்சர்ட்சன், பேட்டர்சன் பெயர் இடம்பிடித்துள்ளது. இதனால் இருவரும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஜோ பர்ன்ஸ், 3. கவாஜா, 4. மார்னஸ் லாபஸ்சேக்னே, 5. டிராவிஸ் ஹெட், 6. கர்ட்டிஸ் பேட்டர்சன், 7. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 8. பேட் கம்மின்ஸ், 9. மிட்செல் ஸ்டார்க், 10. ரிச்சர்ட்சன், 11. நாதன் லயன்.
Tags:    

Similar News