செய்திகள்

உலகின் நம்பர் ஒன் குத்துச்சண்டை வீராங்கனையானார் மேரி கோம்

Published On 2019-01-10 19:14 IST   |   Update On 2019-01-10 19:14:00 IST
சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் வெளியிட்டுள்ள தரவரிசையில் மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். #AIBA #MaryKom
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்பவர் மேரி கோம். 36 வயதாகும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. என்றாலும், அபாரமாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தார்.

சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் இன்று குத்துச்சண்டை உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் 45 முதல் 48 கிலோ லைட் பிளை பிரிவில் இடம்பிடித்துள்ள மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News