செய்திகள்

ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா

Published On 2018-12-31 09:11 GMT   |   Update On 2018-12-31 09:11 GMT
இந்திய பெண்கள் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். #ICC #SmritiMandhana
ஐசிசி பெண்கள் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சாதித்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலை இன்று அறிவித்தது.

இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை ஆகிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே ஹீலி சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News