செய்திகள்

உள்ளூர் கிரிக்கெட்டில் 345 ரன்கள் விளாசிய ரென்ஷா- ஆஸி. அணியில் இடம்கிடைக்குமா?

Published On 2018-12-02 12:01 GMT   |   Update On 2018-12-02 12:01 GMT
உள்ளூர் கிரிக்கெட்டில் முச்சதம் (345) விளாசிய ரென்ஷா, இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியா அணியில் இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். #AUSvIND
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் ரென் ஷா. 22 வயதாகும் இவர் இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் பார்ம் இல்லாமல் தவித்ததால் தொடர்ச்சியாக அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அணியில் இடம்பிடித்திருந்தார். பயிற்சி ஆட்டத்தின்போது பீல்டிங் செய்தபோது, ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதனால் தொடரில் இருந்து விலகினார்.



ஆஸ்திரேலியாவில் கிரேடு அளவிலான தொடரில் விளையாடினார். டூம்புல் அணிக்காக விளையாடிய ரென்ஷா வின்னும்/மேன்லி அணிக்கெதிராக 273 பந்தில் 345 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா தேசிய அணியில் இடம்கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார்.

ஆனால் முதல் தர கிரிக்கெட் தொடரான ஷெப்பீல்டு ஷீல்டு தொடரில் 8 இன்னிங்சில் 158 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்திருந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக 21, 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அணியில் கிடைக்குமா? என்பது சந்தேகமே...
Tags:    

Similar News