செய்திகள்

பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு பதவி நீட்டிப்பு இல்லை

Published On 2018-11-30 07:58 GMT   |   Update On 2018-11-30 07:58 GMT
மிதாலிராஜ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. #MithaliRaj
வெஸ்ட் இண்டீஸில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

இதற்கு பயிற்சியாளர் ரமேஷ்பவார்தான் காரணம் என்று மிதாலிராஜ் குற்றம்சாட்டினார். அவர் தன்னை அவமானப்படுத்தி வேண்டுமென்றே நீக்கினார் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த ரமேஷ்பவார், மிதாலிராஜ் தன்னை தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிரட்டி நெருக்கடி கொடுத்தார் என்று தெரிவித்தார்.



இருவரின் இந்த மோதல்போக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவியின் காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி காலம் நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News