செய்திகள்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 113 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2018-11-23 02:13 GMT   |   Update On 2018-11-23 02:13 GMT
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய அரையிறுதிப் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 113 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
6-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. 

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கணைகளாக பாட்டியா, மந்தானா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மந்தானா 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 34 (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோட்ரிகஸ், கவுர் சற்று நிதானமாக விளையாட 19.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது.



இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 113 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி விளையாடி வருகிறது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND

Tags:    

Similar News