செய்திகள்

பல்லேகெலே டெஸ்ட்- இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

Published On 2018-11-15 11:49 GMT   |   Update On 2018-11-15 11:49 GMT
பல்லேகெலேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று பல்லேகெலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ரோரி பேர்ன்ஸ் (43), ஜோஸ் பட்லர், சாம் குர்ரான் (64) ஆகியோரின் ஆட்டத்தால் 75.4 ஓவரில் 290 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 19 ரன்னுடனும், புஷ்பகுமாரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம்  தொடங்கியது. புஷ்பகுமாரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருணாரத்னே உடன் தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. கருணாரத்னே 63 ரன்னிலும், டி சில்வா 59 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



அதன்பின் மெண்டிஸ் 1 ரன்னிலும், மேத்யூஸ் 20 ரன்னிலும் வெளியேறினார்கள். 7-வது வீரராக களம் இறங்கிய ரோஷென் சில்வா 85 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 103 ஓவரில் 336 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. லீச் மற்றும் ரஷித் தலா மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.

46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்று ஒரேயொரு ஓவர் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து ரன் கணக்கையும் துவக்கவில்லை. விக்கெட்டும் இழக்கவில்லை.
Tags:    

Similar News