செய்திகள்

வங்காள தேச கிரிக்கெட் அணி கேப்டன் மோர்தசா தேர்தலில் போட்டியிடுகிறார்

Published On 2018-11-13 06:51 GMT   |   Update On 2018-11-13 06:51 GMT
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா வருகின்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மோர்தசா, ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வங்காள தேசத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

வங்காளதேசத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மோர்தசாவை களம் இறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி ‘லீக்’ முடிவு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட மோர்தசாவும் சம்மதித்துவிட்டார் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அவரது சொந்த தொகுதியான நரேலில் போட்டியிடுகிறார். ஆனால் இதுகுறித்து மோர்தசா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. 2009-ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டியில் 252 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தற்போது வங்காள தேச அணிக்காக விளையாடி வரும் வீரர் அரசியலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் மோர்தசா அரசியலில் களம் இறங்க எந்த சிக்கலும் இருக்காது.
Tags:    

Similar News