செய்திகள்

பல்லேகெலே டெஸ்ட்- 3-வது வீரராக ஜோஸ் பட்லர்- பென் போக்ஸ் விக்கெட் கீப்பராக நீடிப்பு

Published On 2018-11-13 10:35 IST   |   Update On 2018-11-13 10:35:00 IST
இலங்கைக்கு எதிரான பல்லேகெலே டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #SLvENG
இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அறிமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

காயத்தில் இருக்கும் பேர்ஸ்டோவ் 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணிக்கு திரும்பினால், பென் போக்ஸிற்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பேர்ஸ்டோவ் நாளை பல்லேகெலேயில் தொடங்கும் 2-வது போட்டியில் களம் இறங்கமாட்டார் என்றும், பென் ஸ்டோக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மொயீன் அலி 3-வது வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்து வந்தார். ஆனால் எதிர்பார்த்த வகையில் அவர் விளையாடவில்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோ பட்லரை 3-வது வீரராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஜோ பட்லர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News