செய்திகள்

40 வயது வரை ஆடினால் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார்- கவாஸ்கர் சொல்கிறார்

Published On 2018-11-05 14:00 IST   |   Update On 2018-11-05 14:00:00 IST
இந்திய அணி கேப்டன் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ViratKohli
இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தற்போது ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்னை அதிக வேகத்தில் கடந்து சாதனை படைத்தார். இந்த ஆண்டில் அவர் ஒருநாள் போட்டியில் 14 ஆட்டத்தில் விளையாடி 1,202 ரன் எடுத்துள்ளார். சராசரி 133.55 ஆகும்.

இந்த நிலையில் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலியின் பேட்டிங் நாளுக்குநாள் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவரது இந்த திறமை வாய்ந்த ஆட்டத்தால் எந்த ஒரு சாதனைக்கும் உத்தரவாதம் இல்லை. அவரால் அதிக ரன், அதிக சதம் என பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க முடியும்.

விராட் கோலியின் உடல் தகுதியும் நன்றாக இருக்கிறது. அவரால் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் இல்லாமல் 10 வருடங்களுக்கு மேல் ஆட இயலும். சச்சின் தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். இதேபோல் கோலியும் 40 வயது வரை ஆடினால் டெஸ்ட் சாதனை, ஒருநாள் போட்டி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க இயலும். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளும் அவர் பெயரில் இருக்கும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News