செய்திகள்

அபுதாபி டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை 373 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்

Published On 2018-10-19 18:30 GMT   |   Update On 2018-10-19 18:30 GMT
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை 373 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. #PAKvAUS
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.  

137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள்,  சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.



தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுஷங்கே 41 ரன்களும், டிராவிஸ் ஹெட் 36 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 31 ரன்களும் எடுத்தனர்.

மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 49.4 ஓவரில் 164 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை மொகமது அப்பாஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #PAKvAUS
Tags:    

Similar News