செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு- இந்தியா இதுவரை இல்லாத அளவில் 72 பதக்கங்கள் கைப்பற்றி சாதனை

Published On 2018-10-13 17:25 IST   |   Update On 2018-10-13 17:25:00 IST
இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த பாரா ஆசிய விளையாட்டில இந்தியா ஒட்டுமொத்தமாக 72 பதக்கங்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. #AsianParaGames2018
இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு 72 பதக்கங்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

இதில் 15 தங்கம், 23 சில்வர், 33 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடம் பிடித்துள்ளது. இந்தியா கடந்த 2010 பாரா ஆசிய விளையாட்டில் 14 பதக்கங்களும், 2017-ல் 33 பதங்கங்களும் பெற்றிருந்தன. தற்போது கடந்த முறையை விட இரண்டு மடங்கிற்கு மேல் பதக்கங்கள் வாங்கி அசத்தியுள்ளது.
Tags:    

Similar News