செய்திகள்

U-19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி- இலங்கைக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா

Published On 2018-10-07 10:04 GMT   |   Update On 2018-10-07 10:04 GMT
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #IND19vSL19
துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

அதன்பின் தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள்.

இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். அதேசமயம் அதிரடியாக ரன்கள் குவிக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்தது. 79 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ராவத் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 113 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 85 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 43 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.



கேப்டனும் விக்கெட் கீப்பரும் ஆன சிம்ரான் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஆயுஷ் படோனியும் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. படோனி 28 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்களும், சிம்ரான் சிங் 37 பந்தில் 3 பவுண்டர, 4 சிக்சருடன் 65 ரன்களும் விளாசினார்கள். பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்க இருக்கிறது.
Tags:    

Similar News