செய்திகள்

குடிபோதையில் கார் ஓட்டிய பிரான்ஸ் கேப்டனுக்கு 20 மாதம் தடையுடன் 50 பவுண்டு அபராதம்

Published On 2018-09-12 12:27 GMT   |   Update On 2018-09-12 12:27 GMT
குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் லோரிஸ்க்கு 20 மாதம் தடை மற்றும் 50 ஆயிரம் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Lloris
பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் ஹியூகோ லோரிஸ். விக்கெட் கீப்பராக இருக்கும் இவரது தலைமையில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் கோப்பையை கைப்பற்றியது. இவர் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி அதிகாலை குடித்து விட்டு கார் ஓட்டினார். மத்திய லண்டனில் 2.20 மணிக்கு போலீசார் இவரது காரை நிறுத்தினார்கள். அப்போது குடித்துவிட்டு கார் ஓட்டியது சோதனையில் தெரிய வந்தது. இதனால் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 7 மணி நேரம் காவலில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியிடப்பட்டுள்ளார்.



இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அனுமதிக்கப்பட்டதிற்கு இரண்டு மடங்கு மது அருந்திவிட்டு கார் ஓட்டினார் என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்.

இருதரப்பு வாதத்திற்கும் பிறகு நீதிபதி, லோரிஸ் கார் ஓட்டுவதற்கு 20 மாதம் தடைவிதித்ததுடன், 50 ஆயிரம் பவுண்டு அபராதமும் வித்தித்தார்.
Tags:    

Similar News