செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி- 90 நாள் கவுன்ட் டவுன் தொடங்கியது

Published On 2018-08-29 12:45 GMT   |   Update On 2018-08-29 12:45 GMT
ஒடிசா மாநிலத்தில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 90 நாள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. #HockeyWorldCup #NaveenPatnaik
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 90 நாள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கவுன்ட் டவுன் கடிகாரத்தை முதல்வர் நவீன் பட்நாயக் இயக்கி வைத்தார்.

மேலும், போட்டியை விளம்பரப்படுத்தி மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில், ‘ஹாக்கிக்கு என் இதயம் துடிக்கிறது’ என்ற பிரச்சாரத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நவீன் பட்நாயக், நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மிகச்சிறந்த ஹாக்கி வீரர்களை ஒடிசா மாநிலம் உருவாக்கியிருப்பதாகவும், இந்த உலகக்கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். #HockeyWorldCup #NaveenPatnaik
Tags:    

Similar News