செய்திகள்

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறல்

Published On 2018-08-19 14:58 GMT   |   Update On 2018-08-19 14:58 GMT
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இங்கிலாந்து 128 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #ENGvIND #HardikPandya #KLRahul
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா விராட் கோலி (97), ரகானே (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவரில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்கவில்லை.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். 12-வது ஓவரின் கடைசி பந்தில் குக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.



அதன்பின் வந்த போப்பை 10 ரன்னில் வெளியேற்றினார் இசாந்த் ஷர்மா. 25-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில ஜோ ரூட் 16 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் (15), பென் ஸ்டோக்ஸ் (10), கிறிஸ் வோக்ஸ் (8) அடில் ரஷித் (5) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வெளியேற்ற இங்கிலாந்து 128 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
Tags:    

Similar News