செய்திகள்

ஆசிய விளையாட்டுப்போட்டி- இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்புள்ள விளையாட்டுகள்

Published On 2018-08-18 12:26 IST   |   Update On 2018-08-18 15:08:00 IST
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள விளையாட்டுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். #AsianGames
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் 570 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 36 விளையாட்டில் கலந்து கொள்கிறது.

கபடி, தடகளம், குத்துச்சண்டை, பேட்மின்டன், துப்பாக் சுடுதல், ஆக்கி, மல்யுத்தம், டென்னிஸ், வில்வித்தை மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்மின்டனில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. தடகளத்தில் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா முத்திரை பதிக்கலாம். அவர் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.



துப்பாக்கிசுடும் போட்டியில் மனுபாக்கா, அனிஷ் பன்வாலா, இளவேனில் ஆகியோரும், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, சுஷில்குமார், வினிஷ்போகத், சாக்ஷி மாலிக் ஆகியோரும் பதக்கங்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கபடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் கிடைக்கும். டென்னிசில் ராம்குமார் ராமநாதன் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வாய்ப்பு இருக்கிறது. #AsianGames
Tags:    

Similar News