செய்திகள்

டிஎன்பிஎல் 2018 - ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்ற அருண் கார்த்திக்

Published On 2018-08-13 00:41 IST   |   Update On 2018-08-13 00:41:00 IST
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மூன்றாவது தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணியை சேர்ந்த அருண் கார்த்திக் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். #TNPL2018 #ArunKarthik
சென்னை:

டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

இதில் திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த தொடரில் வீரர்கள் வென்ற விருதுகளின் விவரம்:

ஆட்ட நாயகன் மற்றும் தொடரில் அதிக ரன்கள் (472) எடுத்து தொடர் நாயகன் விருது ஆகியவற்றுடன் அதிக சிக்சர்கள் (23) அடித்த வீரர் விருது அருண் கார்த்திக்க்கு வழங்கப்பட்டது.

தொடரில் அதிக விக்கெட் (15) வீழ்த்திய வீரர் அபிஷேக் தன்வருக்கு அளிக்கப்பட்டது.

சிறந்த கேட்ச் பிடித்த வீரர் ஷாருக் கானுக்கும், தொடரில் அதிக பவுண்டரிகள் (45) அடித்த வீரர் விருது ஜெகதீசனுக்கும் வழங்கப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu
Tags:    

Similar News