செய்திகள்

பாகிஸ்தான் வீரர் பகர் சமான் ஒருநாள் போட்டிகளில் 18 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்து உலக சாதனை

Published On 2018-07-22 10:55 GMT   |   Update On 2018-07-22 10:55 GMT
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை இன்று படைத்துள்ளார். #FakharZaman
புலவாயோ:

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி இன்று புலவாயோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இமால் உல் ஹக் மற்றும் பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர். இதுவரை பகர் சமான் 17 இன்னிங்ஸ்களில் ஆடி 980 ரன்களை எடுத்திருந்தார்.

இன்று நடைபெற்ற போட்டியில் அவர் 20 ரன்களை கடந்த போது, குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். 

இவருக்கு அடுத்தபடியாக விவியன் ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், ஜோனாதன் ட்ராட், குயிண்டான் ட் காக், பாபர் அசாம் ஆகியோர் 21 இன்னிங்ஸ்களில் ஆயிரன் ரன்களை கடந்துள்ளனர்.

குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்த பகர் சமானுக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FakharZaman
Tags:    

Similar News