செய்திகள்

தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் சகா

Published On 2018-07-20 09:54 GMT   |   Update On 2018-07-20 09:54 GMT
இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான சகா, தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருக்கிறார். #Saha #BCCI
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து எம்எஸ் டோனி ஓய்வு பெற்றதும் விருத்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்று ஐபிஎல் தொடரில் சகா சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது இவரது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவரால் பங்கேற்ற இயலவில்லை.

இதற்கிடையே நீண்ட நாட்களாக அவரை அச்சுறுத்தி வந்த தோள்பட்டை காயத்திற்காக பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவரது தோள்பட்டை காயம் குணமடையவில்லை. இதனால் அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.



இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘விருத்திமான் சகாவின் தோள்பட்டை காயத்திற்கான சிகிச்சை முற்றிலும் தவறாக சென்று விட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோ நேரம் வீணானதுதான் மிச்சம். மீண்டும் களத்திற்கு திரும்ப வேண்டுமென்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், இரண்டு மாதத்திற்குப் பிறகுதான் பேட்டிங் செய்ய இயலும். அதன்பின் அவரது காயம் குணமடைவதற்கான வேலை தொடங்கும்’’ என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News