செய்திகள்

இலங்கையில் இருந்து புறப்பட்டார் ஷாம்சி- கடைசி டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

Published On 2018-07-17 14:46 GMT   |   Update On 2018-07-17 14:46 GMT
தென்ஆப்பிரிக்கா அணியின் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான ஷாம்சி குடும்பச் சூழ்நிலை காரணமாக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். #SLvSA
இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய காலே டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி இரண்டரை நாளிலேயே முடிவடைந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 2015-ம் ஆண்டிற்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. மகாராஜ் உடன் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான ஷாம்சி இடம் பிடித்திருந்தார். இவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.



20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் 2-வது டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷாம்சி இடம்பிடிப்பது உறுதியாக இருந்தது. இந்நிலையில் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஷாம்சி அவசரமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார. அவர் எப்போது இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை.

ஒருவேளை போட்டிக்கு முன் அவர் இலங்கை திரும்பாவிடில், புதுமுக வீரர் ஷான் வோன் பெர்க்கிற்கு இடம் கிடைக்கும்.
Tags:    

Similar News