செய்திகள்

கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் டிராபியை தூக்கிப்பிடிக்க ஆசைப்படுகிறேன்- கிரிஸ்மான்

Published On 2018-07-13 20:49 IST   |   Update On 2018-07-13 20:49:00 IST
இறுதிப் போட்டியில் கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் உலகக்கோப்பை டிராபியை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன் என்று கிரிஸ்மான் தெரிவித்துள்ளார். #WorldCup2018
ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான ஆட்டமும், நாளைமறுநாள் இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பிரான்ஸ் அணியின் ஸ்டிரைக்கர் ஆன கிரிஸ்மான், குரோசியாவிற்கு எதிராக நான் கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் உலகக்கோப்பையை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குறித்து கிரிஸ்மான் கூறுகையில் ‘‘நான் சிறுவனாக இருக்கும்போதே உலகக்கோப்பை கனவு இருந்தது. இளைஞர் அணியில் விளையாடும்போது அனைத்து சிறுவர்களுக்கும் உலகக்கோப்பையில், அதுவும் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு உண்டு. எதிர்பார்ப்பு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் கோப்பையை வெல்ல ஆசைப்படுகிறோம். அதற்காக காத்திருக்க முடியாது.



குரோசியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் கோல் அடிக்கிறேனா, இல்லையா என்பது பெரிய விஷயம் இல்லை. உலகக்கோப்பை சாம்பியன் டிராபியை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன். இதுதான் எனக்கு பெரிய விஷயம். உலகக்கோப்பையை வெல்ல எங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News