செய்திகள்

பிரேசில் உலகக்கோப்பையை வெல்லவே கூடாது- டென்னிஸ் வீரர் சொல்கிறார்

Published On 2018-07-06 21:05 IST   |   Update On 2018-07-06 21:05:00 IST
பிரேசில் அணி மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து தொடரை வெல்லவே கூடாது என்று அர்ஜென்டினா டென்னிஸ் வீரர் பெல்லா தெரிவித்துள்ளார். #WorldCup2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை தரநிலை பெறாத அர்ஜென்டினாவின் கிடோ பெல்லா வீழ்த்தினார். பெல்லா இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரில் 3-வது சுற்றுக்கு முன்னேறியது கிடையாது. மரின் சிலிச்சை வீழ்த்தியதன் மூலம் பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் வெற்றி பெறக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பெல்லா கூறுகையில் ‘‘நான் கால்பந்து போட்டியை விரும்பி பார்ப்பேன். ஆனால் அர்ஜென்டினா தோல்வியடைந்ததும், போட்டிகளை பார்க்கவில்லை. ஏனென்றால் சொந்த அணி வெளியேறியது கவலையளிக்கிறது.



பிரேசில் மேலும் உலகக்கோப்பையை வெல்லவே கூடாது. அப்படி நடந்தால் நான் மிகவும் கவலையடைவேன். நான் அதை விரும்பமாட்டேன். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே ஐந்து முறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளனர். நாங்கள் இரண்டு முறைதான் கைப்பற்றியுள்ளோம். இன்னும் ஒருமுறை என்பது சாத்தியமற்றது’’ என்றார்.

அர்ஜென்டினா 1978 மற்றும் 1986-ல் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
Tags:    

Similar News