செய்திகள்

துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்- ஓம் பிரகாஷ் மிதர்வால், விஜய் குமார் இரண்டு தங்கம்

Published On 2018-06-21 15:53 IST   |   Update On 2018-06-21 15:53:00 IST
கேஎஸ்எஸ் மெமோரியல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் ஓம் பிரகாஷ் மிதர்வால், விஜய் குமார் தலா இரண்டு தங்கம் வென்றனர். #Shooting
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கேஎஸ்எஸ் மெமோரியல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்ற வருகிறது. ஆண்களுக்காக 50மீ ப்ரீ பிஸ்டர் பிரிவில் ஓம்பிரகாஷ் மிதர்வால் 560 புள்ளிகள் பெற்ற தங்கப்பதக்கம் வென்றார். 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஓம்காம் சிங் 559 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 553 புள்ளிகளுடன் குர்பால் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.

50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் ஓம் பிரகாஷ், குர்பால் கிங், ஜெய்ன் சிங் அணி 1654 பள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. மோனு தோமர் தலைமையிலான அணி 1641 புள்ளிகள் பெற்றி 2-வது இடமும், ஓம்கார் சிங் அணி 1626 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தது.


விஜய் குமார்

50மீ பிஸ்டல் ஜூனியர் பிரிவில் அன்மோல் ஜெய்ன் தங்கமும், சுரிந்தர் சிங் வெள்ளியும், சுராஜ் பாம்பானி வெண்கலமும் வென்றனர். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், 25மீ சென்டர் பையர் தனிப்பிரிவு மற்றும் அணிப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
Tags:    

Similar News