செய்திகள்

பிட்னஸ் டெஸ்டில் முகமது ஷமி தோல்வி- சைனிக்கு அதிர்ஷ்டம்

Published On 2018-06-11 12:44 GMT   |   Update On 2018-06-11 12:44 GMT
பிட்னஸ் டெஸ்டில் தோல்வியடைந்ததால் முகமது ஷமி ஆப்கானிஸ்தான் டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டு, சைனி சேர்க்கப்பட்டுள்ளார். #INDvAFG
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். அவருடன் இசாந்த் சர்மா, சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பிட்னஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முகமது ஷமி தோல்வியடைந்தார். இதனால் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.



அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 25 வயதாகும் சைனி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். 31 முதல்தர போட்டிகளில் 96 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அணியில் இடம்பிடித்துள்ள இவருக்கு ஆடும்லெவனில் இடம்கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
Tags:    

Similar News