செய்திகள்

100-வது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடுகிறார், இந்திய கேப்டன் சுனில் சேத்ரி

Published On 2018-06-04 09:16 IST   |   Update On 2018-06-04 09:16:00 IST
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 100-வது சர்வதேச கால்பந்து போட்டியில் இன்று விளையாடுகிறார். #SunilChhetri
மும்பை:

4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2-வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டியாகும்.

33 வயதான சுனில் சேத்ரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘100 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. இது பற்றி எனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். இந்த மைல்கல்லை எட்டும் 2-வது இந்தியர் (முதலில் பாய்சுங் பூட்டியா) என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார். #SunilChhetri
Tags:    

Similar News