செய்திகள்

அடுத்தடுத்து உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்- ஜெர்மனி கால்பந்து அணி பயிற்சியாளர்

Published On 2018-05-27 10:42 GMT   |   Update On 2018-05-27 10:42 GMT
ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வெற்றி பெற்று சாதனைப் படைக்க முடியும் என ஜெர்மனி பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஜெர்மனி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

2018-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று அடுத்தடுத்து உலகக்கோப்பையை வென்ற 3-வது அணி என்ற சாதனையைப் படைப்போம் என்று ஜெர்மனி அணி பயிற்சியாளர் ஜொயாசிம் லோயிவ் கூறியுள்ளார்.



பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எந்த அணியும் ஹாட்ரிக் அடித்தது கிடையாது. இத்தாலி 1934 மற்றும் 1938-ம் ஆண்டு அடுத்தடுத்து உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதன்பின் பிரேசில் 1958 மற்றும் 1962-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அதேபோல் இத்தாலியின் விட்டோரியோ போஸ்ஸோ என்ற பயிற்சியாளர் மட்மே இரண்டுமுறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. தற்போது ஜெர்மனி பயிற்சியாளருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
Tags:    

Similar News