செய்திகள்

போகத் சகோதரிகள் ஆசிய போட்டிக்கான பயிற்சி முகாமிலிருந்து வெளியேற்றம்

Published On 2018-05-18 10:54 IST   |   Update On 2018-05-18 10:54:00 IST
ஆசிய போட்டிகளுக்காக பயிற்சி முகாமில் பங்கேற்ற கீதா போகத் மற்றும் அவரது சகோதரிகள் உட்பட 15 பேருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. #AsianGamescamp #GeetaPhogat
புதுடெல்லி:

மல்யுத்தத்தில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர்கள் போகத் சகோதரிகள். குறிப்பாக கீதா போகத் மற்றும் பபிதா போகத் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை பெற்று தந்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய போட்டிகள் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் இந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை அரியானாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒழுங்கின்மை காரணமாக போகத் சகோதரிகள் உட்பட 15 பேர் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜி புஷன் சரண் சிங், 'தேசிய முகாமில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகள் மூன்று நாட்களில் நேரில் இங்கு நேரில் வர வேண்டும் எனக் கூறப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதனை நேரில் வந்து தனது பயிற்சியாளர்களிடம் கூறி தீர்வு காணலாம். ஆனால் கீதா போகத், பபிதா போகத், சாக்‌ஷி மாலிக்கின் கணவர் சத்யார்த் கண்டியன் உட்பட 15 பேர் நேரில் வரவில்லை. மேலும், வராதது குறித்து எந்த தகவலும் கூறவில்லை. இது மிகப்பெரிய ஒழுங்கற்ற செயலாகும்.



இதனால் இவர்கள் பயிற்சியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளித்த பின்னர் தடையை விலக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்' என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து பேசிய பபிதா போகத், 'எனக்கு இரண்டு கால்களிலும் அடிபட்டுள்ளது. அதனால் நான் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. நான் இதுகுறித்து பெடரேசனுக்கு விளக்கம் அனுப்பியுள்ளேன்' எனக்குறிப்பிட்டார்.  #AsianGamescamp #GeetaPhogat

Tags:    

Similar News