செய்திகள்

தண்டனை அதிகரித்ததால் உலகக் கோப்பையை மிஸ்ஸிங் செய்கிறார் பெரு கேப்டன்

Published On 2018-05-15 19:15 IST   |   Update On 2018-05-15 19:15:00 IST
கொகைன் போதைப் பொருள் உட்கொண்ட விவகாரத்தில் பெரு கால்பந்து அணி கேப்டனின் தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டதால் உலகக் கோப்பையை மிஸ்ஸிங் செய்கிறார்.
பெரு கால்பந்து அணியின் கேப்டன் குயெர்ரேரோ. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவிற்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடினார். அப்போது அவருக்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொகைன் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு பிபா ஓராண்டு தடைவிதித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனை 6 மாதமாக குறைக்கப்பட்டது. இதனால் அவரது தண்டனை கடந்த 10 நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இதனால் ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெறும் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



ஆனால் உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி டீயில் கொகைன் போதைப்பொருள் கலந்து அருந்திய குயெர்ரேரோவிற்கு அதிகப்படியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் முறையிட்டது. இதை ஏற்றுக் கொண்ட நடுவர் மன்றம் 6 மாத தண்டணையை 14 மாதங்களாக உயர்த்தியது. இதனால் குயெர்ரேரோ உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News