செய்திகள்

பிரீமியர் லீக்கில் ஓரே சீசனில் அதிக கோல் அடித்தது முகமது சாலா சாதனை

Published On 2018-05-13 17:04 GMT   |   Update On 2018-05-13 17:04 GMT
ரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஒரே சீசனில் அதிக கோல் அடித்து முகமது சாலா சாதனைப் படைத்துள்ளார். #Salah
எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2017-18 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். அறிமுக சீசனிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார். ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடித்து அசத்தி வருகிறார்.

இந்த சீசனின் கடைசி போட்டியில் லிவர்பூல் தனது சொந்த மைதானத்தில் பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் லிவர்பூல் 4-0 என பிரைட்டனை வீழ்த்தியது.



முகமது சாலா 26-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இந்த கோலின் மூலம் 38 போட்டிகள் கொண்ட இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த போட்டிக்கு முன் 31 கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ (மான்செஸ்டர் யுனைடெட் 2007-08), சுவாரஸ் (லிவர்பூல் 2013-14) சாதனையை சமன் செய்திருந்தார். இந்த போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம் இருவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
Tags:    

Similar News