ஐ.பி.எல்.(IPL)

13 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 பந்தில் முதல் சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பந்த்

Published On 2018-05-10 22:25 IST   |   Update On 2018-05-10 22:25:00 IST
டெல்லி டேர்டெவில்ஸ் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 பந்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். #IPL2018 #DDvSRH #RishabhPant
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.



டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா (9), ஜேசன் ராய் (11), ஷ்ரேயாஸ் அய்யர் (3) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



36 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், 56 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்தின் முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2-வது அரைசதத்தை 20 பந்தில் கடந்த ரிஷப் பந்த், கடைசி 8 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.



இந்த சீசனில் 3-வது சதத்தை ரிஷப் பந்த் அடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் வாட்சன் 106 ரன்களும், கிறிஸ் கெய்ல் 104 (அவுட் இல்லை) ரன்களும் அடித்துள்ளனர்.
Tags:    

Similar News