செய்திகள்

நம்ப முடியாத அளவிற்கான ஆதரவுக் குரல்கள்- ஸ்டீவ் ஸ்மித் உருக்கம்

Published On 2018-05-04 20:00 IST   |   Update On 2018-05-04 20:00:00 IST
பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப் பிறகு நம்பமுடியாத அளவிற்கான ஆதரவுக் குரல்கள் வந்தன என ஸ்டீவ் ஸ்மித் உருக்கமாக தெரிவித்துள்ளார். #Stevesmith
பந்தைச் சேதப்படுத்தி சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார்.

அதில் “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக் குரல்கள் நம்ப முடியாதவை. இந்த ஆதரவுக் குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி விட்டது. இனி என் தரப்பிலிருந்து உங்கள் நம்பிக்கையைப் பெற நான் கடுமையாக உழைக்க வேண்டும்.



என்னுடைய இந்தக் கடினமான காலக்கட்டத்தில் என் தாய், தந்தை, மனைவி என்று எனக்கு பாறை போல் தைரியமாக, உறுதுணையாக நின்றனர். உங்களுக்கு என் நன்றிகள் போதாது. உலகில் குடும்பம் மிக முக்கியமானது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியடைந்து குறிப்பிட்டுள்ளார்.

Similar News