செய்திகள்

2 மலேசிய பேட்மிண்டன் வீரர்களுக்கு தடை

Published On 2018-05-03 10:52 IST   |   Update On 2018-05-03 10:52:00 IST
மலேசியாவை சேர்ந்த தன் சுன் சியாங் மற்றும் வீரர் சுல்பாட்லி சுல்கிப்லி ஆகியோர் பெட்டிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இருவருக்கும் 15 மற்றும் 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.#badminton #malaysia
உலக ஜூனியர் பேட்மிண்டன் முன்னாள் சாம்பியனான மலேசியாவை சேர்ந்த தன் சுன் சியாங் மற்றும் வீரர் சுல்பாட்லி சுல்கிப்லி ஆகியோர் பெட்டிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய உலக பேட்மிண்டன் சம்மேளனம் இருவருக்கும் முறையே 15 மற்றும் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இருவரும் பேட்மிண்டன் சம்பந்தமான எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தன் சுன் சியாங்குக்கு ரூ.10 லட்சமும், சுல்பாட்லி சுல்கிப்லிக்கு ரூ.16 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  #badminton #malaysia

Similar News