செய்திகள்

எனது சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான் - சச்சின் தெண்டுல்கர்

Published On 2018-04-27 10:02 GMT   |   Update On 2018-04-27 10:02 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர், இந்தாண்டு தனக்கு கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு பற்றி டுவிட்டரில் கூறியுள்ளார். #sachinturns45 #HappyBirthdaySachin #SRT45

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18426 ரன்களும் குவித்துள்ளார்.

கடந்த 24-ம் தேதி சச்சின் தெண்டுல்கருக்கு 44 வயது முடிவடைந்து, 45-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்தார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதை வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமண், முகமது கையிப், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தாண்டு தனக்கு கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு குறித்து சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

இந்தாண்டு எனக்கு கிடைத்த ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசு - சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கட்டாய உடல்நலம் மற்றும் உடற்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள செய்தி தான். இந்திய குழந்தைகளின் விளையாட்டு, உடல்நலம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு துணைநிற்கும் வாரியத்துக்கு நன்றி. விளையாடுவோம்.

இவ்வாறு சச்சின் கூறியுள்ளார். #sachinturns45 #HappyBirthdaySachin #SRT45
Tags:    

Similar News