செய்திகள்

ஐபிஎல் - மும்பை அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Published On 2018-04-24 21:51 IST   |   Update On 2018-04-24 21:51:00 IST
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. #MIvSRH #IPL2018
மும்பை:

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. ஐதராபாத் அணியின் தவான், வில்லியம்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

தவான் 5 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய சாஹா ரன்கள் ஏதுவும் இன்றி ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 29, மணிஷ் பாண்டே 16 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஷாகிப் அல் ஹசன் 2, முகம்மது நபி 14 ரன்கள், ரஷித் கான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் யூசுப் பதான் 29 ரன்கள் எடுக்க ஐதராபாத் அனி 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. மும்பை அணி தரப்பில் மெக்லெனாகன், ஹர்திக் பாண்டியா, மார்கண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். #MIvSRH #IPL2018

Similar News