செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் - ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்

Published On 2018-03-29 14:19 IST   |   Update On 2018-03-29 14:19:00 IST
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #IPL2018
புதுடெல்லி:

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விலகினார். அதோடு தடை காரணமாக ஐ.பி.எல்.லிலும் அவர் ஆடமுடியாது.

இதற்கிடையே, புதிய கேப்டனுக்கான பட்டியலில் ஷிகார் தவான், மனீஷ்பாண்டே (இந்தியா) வில்லியம்சன் (நியூசிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காளதேசம்) ஆகியோர் இருந்தனர்.



இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல். விளையாட்டில் சன்ரைசர்ஸ் அணியை தவிர மற்ற அணிகளில் எல்லாமே இந்தியர்கள்தான் கேப்டனாக உள்ளனர். டோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்), விராட் கோலி (ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூர்), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்), அஸ்வின் (கிங்ஸ்லெவன் பஞ்சாப்), காம்பீர் (டெல்லி டேர்டெவில்ஸ்), ரகானே (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகியோர் கேப்டனாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #Tamilnews

Similar News