செய்திகள்

மனைவியை சந்திக்க முகமது‌ஷமி மறுப்பு

Published On 2018-03-28 07:34 GMT   |   Update On 2018-03-28 07:34 GMT
விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் முகமதுசமியை பார்க்க வந்த அவரது மனைவி ஹசின் ஜகானை சந்திக்க அவர் மறுத்துவிட்டார்.
புதுடெல்லி:

இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது‌சமி. இவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி ஹசின் ஜகான் குடும்ப வன்முறை குற்றச்சாட்டை கூறினார். ‌சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தி முகமது‌சமி குற்றமற்றவர் என்று அறிவித்தது. இதை தொடர்ந்து வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றார். அதோடு ஐ.பி.எல். போட்டியிலும் ஆடுகிறார். இந்த நிலையில் முகமது‌சமி விபத்து ஒன்றில் காயம் அடைந்தார்.

அவரை பார்ப்பதற்காக மனைவி ஹசின் ஜகான் சென்றுள்ளார். ஆனால் ‌சமி மனைவியை சந்திக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ஹசின் ஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

காயம் அடைந்த ‌ஷமியை பார்ப்பதற்காக சென்றேன். ஆனால் என்னை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். அத்துடன் என்னை மிரட்டினார். கோர்ட்டில் சந்திக்கலாம் என்றார். குழந்தையை சந்தித்து விளையாடினார். அவரது தாயார் ஒரு பாதுகாவலர் போல் அவருடனே இருந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஹசின் ஜகான் கொடுத்த புகாரில் ‌சமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் வழக்கு பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News