செய்திகள்

கோலிக்கு, இங்கிலாந்து முன்னாள் வீரர் எதிர்ப்பு

Published On 2018-03-28 10:00 IST   |   Update On 2018-03-28 10:00:00 IST
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அனுமதிப்பதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ViratKohli #BobWillis
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் அளித்த ஒரு பேட்டியில் ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அனுமதிப்பது முட்டாள்தனமானது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் இங்குள்ள சூழலில் விளையாடி பழகிவிட்டால், தனது திறனை வளர்த்துக் கொள்வார். கடந்த முறை அவர் இங்கிலாந்தில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதே நிலையை அவரை தொடர வைக்க வேண்டும். முன்பு போலவே அவர் இங்கிலாந்து மண்ணில் திணற வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் வந்து ஆடுவதால் இங்கிலாந்தின் 2-ம் தர வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் கவுண்டி போட்டியில் ஆடும் வாய்ப்பு குறைந்து விடுகிறது’ என்றார். 

Similar News