செய்திகள்

ஒரு தொடரில் அதிக ரன்கள் - விராட் கோலி புதிய சாதனை

Published On 2018-02-26 07:04 GMT   |   Update On 2018-02-26 07:04 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 871 ரன் குவித்ததன் மூலம் ஒரு சுற்றப்பயணத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தார். #ViratKohli #SAvIND
இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் தொடக்கத்தில் ஏமாற்றத்தை அளித்தது. பின்னர் இந்திய வீரர்கள் இந்தப் பயணத்தை மிகவும் வெற்றிகரமாக முடித்தனர்.

முதல் 2 டெஸ்டில் தோற்ற இந்திய அணி கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. ஒரு நாள் தொடரை 5-1 என்ற கண்க்கில் கைப்பற்றி விராட் கோலி தலைமையிலான அணி புதிய வரலாறு படைத்தது. அதை தொடர்ந்து 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பபற்றியது.

தென் ஆப்பிரிக்க பயணத்தில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் இந்த தொடரில் மொத்தம் 4 சதம் உள்பட 871 ரன்கள் ( 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர்) குவித்தார். 20 ஓவர் போட்டியில் அவர் அபாரமாக ஆடி இருந்தால் ஆயிரம் ரன்கள் வரை எடுத்து இருக்கலாம். அதை தவறவிட்டார்.

871 ரன் குவித்ததன் மூலம் ஒரு சுற்றப்பயணத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தார். மேலும், இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்தது.

ஒரு சுற்றுப்பயணத்தில் அதிக ரன் எடுத்தவர்களில் ‘டாப் 5’ வீரர்கள் விவரம்:- #SAvIND #INDvSA #ViratKohli


Tags:    

Similar News