செய்திகள்

இந்திய கேப்டனாக ரோகித்சர்மா சாதனை

Published On 2018-02-26 06:46 GMT   |   Update On 2018-02-26 06:46 GMT
20 ஓவர் போட்டியில் முதல் 4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். சர்வதேச அளவில் 6-வது கேப்டன் ஆவார். #SAvIND #T20 #RohitSharma
கேப்டவுன்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் வீராட் கோலி முதுகுவலி காரணமாக விளையாடவில்லை.

இதனால் ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையிலான அணி 7 ரன் வித்தியாசத்தில் வென்றது. அதோடு தொடரையும் கைப்பற்றியது.

ரோகித்சர்மா தலைமையில் இந்திய அணி 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றியாகும்.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவரில் வீராட் கோலி ஆடவில்லை. திருமணத்துக்காக இந்தப் போட்டியில் விலகி இருந்தார். இதனால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெற்றது. கட்டாக் போட்டியில் 93 ரன்னிலும், இந்தூரில் 88 ரன் வித்தியாசத்திலும் மும்பை போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

20 ஓவர் போட்டியில் முதல் 4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். சர்வதேச அளவில் 6-வது கேப்டன் ஆவார்.

பாகிஸ்தானை சேர்ந்த மிஸ்பா-உல்-ஹக், சகீத் அப்ரிடி, சர்பிராஸ் அகமது, இலங்கையை சேர்ந்த சங்ககரா, மலிங்கா ஆகியோர் இதற்கு முன்பு தங்களது முதல் நான்கு 20 ஓவரில் வெற்றி பெற்றுக் கொடுத்தனர். அந்த வரிசையில் ரோகித்தும் இணைந்துள்ளார்.
Tags:    

Similar News