செய்திகள்

அரைசதத்தை சதமாக மாற்ற திணறும் ஜோ ரூட்

Published On 2018-02-25 13:51 GMT   |   Update On 2018-02-25 13:51 GMT
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் அரைசதங்களை சதங்களாக மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். இதனால் சதங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது. #NZvENG
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் ஜோ ரூட். தனது சிறப்பான ஆட்டத்தால் இந்த தலைமுறையின் வீரர்களில் ஒருவர் என்று கணிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோரும் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களும் அடித்துள்ளார்.



இன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னணி பேட்ஸ்மேன் ஒருவர் அரைசதம் அடித்துவிட்டால், அதை சதமாக மாற்றிவிடும் வல்லமை படைத்தவர்கள்.

ஆனால் ஜோ ரூட்டிற்கு இந்த விஷயத்தில் ராசி அதிக அளவில் கைக்கொடுக்கவில்லை. இந்த போட்டியில் மட்டுமல்ல கடைசி 12 போட்டிகளில் 59, 72, 54, 84, 51, 67, 61, 83, 58*, 91*, 62, 71 ரன்கள் எடுத்து சதம் அடிக்கம் வாய்ப்பை இழந்துள்ளார். வரும் காலங்களிலாவது அரைசதத்தை சதமாக மாற்றுவாரா? என்பதை பார்ப்போம்.
Tags:    

Similar News