செய்திகள்

பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி- அர்செனல் தோல்வி

Published On 2018-02-11 19:06 IST   |   Update On 2018-02-11 19:06:00 IST
பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. அர்செனல் தோல்வியடைந்தது. #PremierLeague #MCI #TOT
பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் அர்செனல் - டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி 1-0 என அர்செனலை வீ்ழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி லெய்செஸ்டர் சிட்டியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 5-1 என லெய்சஸ்டர் சிட்டியை துவம்சம் செய்தது. சிட்டி அணியின் செர்ஜியோ அக்யூரோ நான்கு கோல்கள் அடித்து அசத்தினார். மேலும் ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு கோல் அடித்தார். லெய்செஸ்டர் சிட்டி அணியின் வார்டி 24-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.



மற்ற ஆட்டங்களில் எவர்டன், வெஸ்ட் ஹாம், ஸ்வான்சீ அணிகள் வெற்றி பெற்றது. ஸ்டோக் - பிரைட்டன் இடையிலான ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

மான்செஸ்டர் சிட்டி 57 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 56 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ அணி 52 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. அர்செனல் 45 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

Similar News