செய்திகள்

பள்ளி டேபிள் டென்னிஸ்: கிருத்திகாவுக்கு இரட்டை பட்டம்

Published On 2018-01-30 12:39 IST   |   Update On 2018-01-30 12:39:00 IST
எஸ்.டி.ஏ.டி- ஏ.கே.ஜி டேபிள் டென்னிஸ் மையம் சார்பில் குடியரசு தின கோப்பைக்கான பள்ளிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் பி.எஸ். சீனியர் பள்ளி மாணவி எஸ்.கிருத்திகா இரண்டு பிரிவில் பட்டம் வென்றார்.
எஸ்.டி.ஏ.டி- ஏ.கே.ஜி டேபிள் டென்னிஸ் மையம் சார்பில் குடியரசு தின கோப்பைக்கான பள்ளிகள் டேபிள் டென்னிஸ் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

பி.எஸ். சீனியர் பள்ளி மாணவி எஸ்.கிருத்திகா இரண்டு பிரிவில் பட்டம் வென்றார். அவர் சீனியர் பிரிவில் 11-7, 11-8, 11-9 என்ற கணக்கில் பாக்யஸ்ரீயையும், ஜூனியர் பிரிவில் 11-8, 11-9, 11-7 என்ற கணக்கில் பிரியதர்ஷினியையும் தோற்கடித்தார். மற்ற பிரிவுகளில் ரகுராம் (சீனியர்) ஜூபேர்கான் (ஜூனியர்), அத்வைத், பிரியதர்ஷினி (சப்-ஜூனியர்), உமேஷ், ஹன்ஷினி (கேடட்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ், வருமானவரி உதவி கமி‌ஷனர் விஜயலட்சுமி ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளர் ஜி.சிவக்குமார், போட்டி இயக்குனர் முரளிதரராவ், கன்வீனர் சீனிவாசராவ், ஏ.கே.ஜி.அகாடமி தலைவர் ஜி.ரவிக்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். #tamilnews

Similar News