செய்திகள்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி

Published On 2018-01-29 05:24 GMT   |   Update On 2018-01-29 05:35 GMT
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #U19CWC #Australia #Afghanistan
கிறிஸ்ட்சர்ச்:

19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் அரை இறுதி ஆட்டம் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்தது.

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 48 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டது. இக்ராம் அலி அதிகபட்சமாக 80 ரன் எடுத்தார். மெர்லோ 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 37.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. எட்வர்ட்ஸ் 65 ரன்னும் பரம் உபால் 32 ரன்னும் எடுத்தனர்.



ஆஸ்திரேலிய அணி 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது. இதற்கு முன்பு 1988, 2002, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

2-வது அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News