செய்திகள்

இளம் வயதில் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி கேப்டன்: ரிஷப் பந்த் சாதனை

Published On 2017-12-29 15:33 GMT   |   Update On 2017-12-29 15:33 GMT
இளம் வயதில் ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு சச்சின் தெண்டுல்கர் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். #RanjiTrophy
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டெல்லி - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டெல்லி அணியின் கேப்டனாக இசாந்த் சர்மா இருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா தொடருக்காக இசாந்த் சர்மா தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டதன் மூலம் ரிஷப் பந்த் சாதனைப் படைத்துள்ளார்.



இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 1994-95-ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 21 வயது 337 நாட்களில் கேப்டனாக இருந்து சாதனைப் படைத்திருந்தார். இன்று ரிஷப் பந்த் 20 வயது 86 நாட்களில் கேப்டனாக இருந்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

ரிஷப் பந்த் 20 முதல்தர போட்டிகளில் 1502 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 55.62 ஆகும்.
Tags:    

Similar News